தாய்லாந்தில் தாம் லுவாங் குகைக்குள் சிக்கியிருக்கும் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணியில் பேரிடி விழுந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட முக்குளிப்பாளர் ஒருவர் மரண மடைந்தார். இதனால் குகைக்குள் சிக்கி யிருப்பவர்களை மீட்கும் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிர டியான நடவடிக்கைகளை எடுத்தாலொழிய சிறுவர்களைக் காப்பாற்றுவது சிரமம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குகைக்குள் நுழையும் நீண்ட, குறுகிய பாதையில் வெள்ளம் நிரம்பியிருப்பதால் அதில் மூழ்கி நீந்தி சிறுவர்கள் வெளியே வந்தாக வேண்டும். இதற்கு நீச்சலும் முக்குளிப்பு பயிற்சியையும் அவர்கள் அறிந் திருக்க வேண்டும். ஆனால் 11 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களில் பெரும்பாலோருக்கு நீச்சல் தெரியாது. முக்குளிப்பு அனு பவமும் அவர்களுக்கு இல்லை. இவை மட்டுமின்றி அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு வசதிகளையும் செய்தாக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் மழை பெய்து குகைக் குள் வெள்ள நீர் மேலும் புகுந்தால் சிறுவர்களின் உயிருக்கு பேரா பத்து ஏற்படலாம் என்று அஞ்சப்படு கிறது. குகை நுழைவாயிலிலிருந்து நான்கு மீட்டர் தொலைவில் ஒரு மேடான பகுதியில் சிறுவர்களும் பயிற்றுவிப்பாளரும் சிக்கியுள்ள னர்.
சிறுவர்களை மீட்கும் பணியில் உயிரிழந்த தாய்லாந்து கடற்படையின் முன்னாள் முக்குளிப்பாளர் சாமான் குனோன்ட்.
படம்: த நேஷன்/ஏசியா நியூஸ் நெட்வொர்க்