சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் திடீரென்று வியாழக்கிழமை அறிவித்தது. இதனை அடுத்து நேற்றுக் காலையில் சொத்துத்துறை பங்கு களின் விலை இறக்கம் கண்டது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் நேற்றுக் காலை 9.03 மணி நில வரப்படி சிட்டி டெவலப்மெண்ட்ஸ் பங்கு விலை $1.81 குறைந்து $9.40க்கு விலை போனது. அதே போல யுஓஎல் குழு பங்கும் 15% விலை குறைந்து $6.59க்கு விற்கப்பட்டது.
ஆக்ஸ்லி ஹோல்டிங்ஸ் பங்கு ஆறு காசு குறைந்து 35 காசாக விலைபோனது. கேப்பிட்டல் லாண்ட் பங்கு விலை $3.06 ஆக இருந்தது. இது 4% குறைவாகும். இதனிடையே, பிராப்நெக்ஸ் என்ற நிலச் சொத்து நிறுவனத்தின் பங்கு விலை 5.5 காசு குறைந்து 63.5 காசாக விற்பனையானது. நிலச் சொத்துத் தரகு நிறுவன மான ஏபிஏசி ரியாலிட்டி நிறு வனத்தின் பங்கு விலை 12.5 காசு குறைந்து 65.5 காசாக விலைப்போனது.