தாய்லாந்து குகைக்குள் சிக்கி உள்ள 13 பேர் உயிருக்குப் போராடும் வேளையில் அந்நாட் டின் பயணிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் நாற்பது பேர் மாண்டனர். வியாழக்கிழமை படகு மூழ் கியதை நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் தாய்லாந்து அதி காரிகள் உறுதி செய்தனர். புக்கெட் வட்டார கடற் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன என்று கூறிய தாய் லாந்தின் துறைமுக அதி காரிகள், இன்னமும் 16 சீனப் பயணிகளைக் காணவில்லை என்றும் 49 பயணிகள் மீட்கப் பட்டுள்ளனர் என்றும் தெரிவித் தனர்.
கடலில் மிதக்கும் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வச்சிரா புக்கெட் மருத்துவமனை யில் வைக்கப்படுகின்றன. ஏராளமானோர் படகில் சிக்கியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதி கரிக்கும் என்று அஞ்சப்படு கிறது. புக்கெட்டுக்கு அருகே அந்த மான் கடற்பகுதியில் ஃபீனிக்ஸ் படகு மூழ்கியபோது அதில் 105 பயணிகள் இருந்தனர். இவர்களில் 93 பேர் சுற்றுலாப் பயணிகள். 12 பேர் படகின் சிப்பந்திகள். ஒருவர், பயண வழிகாட்டி. உயிர்பிழைத்த சீனப்பெண் ஒருவர் மயக்கநிலையில் புக் கெட் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.
மீட்புப் பணியாளர்கள் விபத்தில் இறந்த ஒருவரின் உடலை தூக்கிச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்