அமெரிக்க கடற்படை வரலாற்றி லேயே ஆகப்பெரிய, மிகவும் பரந்த அளவிலான ஊழல் தில்லுமுல்லு சதித்திட்டம் என்று வர்ணிக்கப் படும் விவகாரத்தில் தொடர்புடைய சிங்கப்பூரரான ஒரு மாதுக்கு இரண்டு ஆண்டு மற்றும் ஒன்பது மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. குர்ஷரன் கோர் ஷரோன் ராச்செல், 57, என்ற அந்த மாது மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது.
அமெரிக்கக் கடற்படை பற்றிய ரகசியமான தகவல்களைத் தெரி விப்பதற்குக் கைமாறாக கிளின் டிஃபென்ஸ் மரைன் (ஆசியா) என்ற ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த லியோனார்ட் கிளின் ஃபிரான்சிஸ் என்ற மலே சியரிடமிருந்து S$130,000க்கும் மேற்பட்ட தொகையை லஞ்சமாக அந்த மாது பெற்று இருக்கிறார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அமெரிக்கக் கடற்படையில் முன்பு முன்னணி ஒப்பந்த வல்லு நராக வேலை பார்த்தபோது கூர் ஷரன் இந்தக் குற்றத்தைச் செய்த ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் சிங்கப்பூரிலிருந்து செயல்பட்டார். அந்த மாது 2015ல் விலகினார். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அரசு ஊழிய ராகப் பணியாற்றியிருந்தார். அமெரிக்கக் கடற்படை கப்பல் கள் தொடர்பான ஒப்பந்தங்களைக் கையாளுவது, ஒப்பந்த நிபந்தனை களை வரையறை செய்வது, பேச்சு வார்த்தை நடத்துவது, ஏலக்குத் தகைகளை மதிப்பிடுவது போன் றவை அமெரிக்கக் கடற்படையில் அந்த மாதின் பணியாக இருந்தன. ஃபிரான்சிஸ்சிடமிருந்து அந்த மாது பெற்ற லஞ்சத்தில் S$100,000 தொகையை கூட்டுரிமை அடுக்கு மாடி வீடு ஒன்றுக்கான முன்பண மாகவும் புருடன்ஷியல் காப்புறுதித் திட்டம் வாங்கவும் அவர் பயன் படுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட சிங்கப்பூரரான குர்ஷரன் கோர். படம்: ஷின் மின்