வாஷிங்டன்: சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா நேற்று அந்த வரிகளை வசூலிக்கத் தொடங் கியது. மேலும் $500 பில்லியன் மதிப்பிலான சீன இறக்குமதிகளின் மீது வரிகளை தான் விதிக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித் திருக்கிறார். சீன இயந்திரங்கள், மின்னியல் பொருட்கள், கணினி பாகங்கள், 'எல்ஈடி' தொலைக்காட்சி திரை கள் உள்ளிட்ட 818 பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் மீது திரு டிரம்ப் 25% வரியை விதித்துள்ளார். உலகின் இரண்டு ஆகப் பெரும் பொருளியல்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் தோல்வியை அந்த வரிகள் எடுத்துரைப்பதாக கவனிப் பாளர்கள் கருதுகின்றனர். அந்த வரிகளால் சந்தைகளில் பாதிப்பு, விலையேற்றம், வளர்ச்சி மெது வடைதல் ஆகியவை ஏற்படலாம் என்று வர்த்தகத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
சீன அரசாங்கம் இணைய ஊடுருவல் வழி அமெரிக்காவின் வர்த்தகம் சார்ந்த தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. அத்துடன், சீன அரசாங்கத்தின் நிதி ஆதரவில் சீன நிறுவனங்கள் அனத்துலக அளவில் மற்ற நிறு வனங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவ தாகவும் அமெரிக்கா கண்டித் துள்ளது.