சோச்சி: முதற்சுற்று ஆட்டங் களில் அருமையான செயல் பாட்டை வெளிப்படுத்திய ரஷ் யாவும் குரோவேஷியாவும் இன் றிரவு நடக்கவுள்ள காலிறுதி யிலும் அதைத் தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளன. உலகக் கிண்ணத் தொட ரில் பங்கேற்கும் அணிகளில் ஆகப் பிந்திய நிலையில், அதா வது உலகத் தரவரிசையில் 70வது இடத்தில் இருக்கிறது ரஷ்யா. போட்டிகளை ஏற்று நடத்தும் நாடு என்ற அடிப்படை யில் வாய்ப்புப் பெற்றாலும், அவ் வணி உத்வேகத்துடன் ஆடி வெற்றிகளை ஈட்டி வருகிறது. அதிலும், காலிறுதிக்கு முந்திய சுற்றில் முன்னாள் வெற்றியாளரான ஸ்பெயினை பெனால்டி வாய்ப்புகள் மூலம் விரட்டியடித்ததைக் கண்டு உலகக் காற்பந்து ரசிகர்கள் மூக்கின்மேல் விரல் வைத்தனர். மூன்று கோல்களை அடித் திருக்கும் தாக்குதல் ஆட்டக் காரர் அர்ஜோம் ஸ`பா, மயக்க வைக்கும் மத்திய திடல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் கொலொவின், தற்காப்பில் வசீ கரிக்கும் இலியா குத்தெபோவ் எனத் திறமையான விளையாட் டாளர்களைக் கொண்ட ரஷ்ய அணி, தனி நாடானபின் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறும் ஆவலில் உள்ளது.
ரஷ்ய அணியின் தற்காப்பு வீரர் இலியா குத்தெபோவ்.