You are here

செங்காங்குக்கு புதிய நகர மேம்பாட்டுக் குழு

செங்காங் நகரை மேம்படுத்துவதற் காகவும் அந்த நகர மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வும் ஒரு புதிய நகர மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. செங்காங் நகரின் வெவ்வேறான பகுதிகளை மேற்பார்வையிடும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அந்தக் குழுவை அமைத்து இருக்கிறார்கள். ‘செங்காங் நகர மேம்பாட்டுக் குழு’ என்ற அந்தப் புதிய குழு வுக்குப் போக்குவரத்து, சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் தலைமை தாங்குவார். இவர் செங்காங் மேற்கு தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

புதிய குழு பற்றி டாக்டர் லாம் நேற்று அறிவித்தார். செங்காங் நகர், பொங்கோல் ஈஸ்ட், செங்காங் சென்ட்ரல், செங்காங் வெஸ்ட், செங்காங் சவுத், ஜாலான் காயூ ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட ரிவர்வேல் முதல் கம்பாஸ்வேல் வரை அங்கோர்வேல், ஃபெர்ன் வேல், ஜாலான் காயூ வரை செங் காங் நகரம் பரவியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஒப்பிட்டுப் பார்க்கையில் புதிய நகராக இருக்கும் செங்காங்கில் பொதுவான பல தன்மைகளைத் தாங்கள் பகிர்ந்துகொள்வதாக அவர் புதிய சமூக மையத்திற் கான நில அகழ்வு நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.

செங்காங் நகர சமூக மையத்துக் கான நில அகழ்வு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட பிரதமர் லீ சியன் லூங்கிடம் பள்ளி மாணவி ஒருவர் தனது பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் காட்டுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்