செங்காங்கில் முதியோருக்கு மூன்று நிலையங்கள் திறப்பு

செங்காங்கில் மூன்று முதியோர் ஆதரவு நிலையங்கள் அதிகார பூர்வமாக திறந்துவைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு நிலையத்தில் நேற்று முதியவர்கள் ஆடியும் பாடியும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். அந்த நிலையங்களில் ரிவர் வேலில் இருக்கும் மூத்தோர் நட வடிக்கை நிலையமும் ஒன்று. 'வடகிழக்கிற்கான மூத்தோர் நடவடிக்கை நிலையம்' என்ற மற்றொரு நிலையம், மூத்தோ ருக்கு ஆலோசனை மற்றும் கண் காணிப்புச் சேவைகளை வழங்கு கிறது. 'மூத்தோர் குழும இல்லம்' என்ற மூன்றாவது நிலையம், மூத்தோருக்கு வசதியான அம்சங்களைக் கொண்டிருக்கும் வாடகை வீடுகளை வழங்குகிறது. இந்த மூன்று நிலையங்களை யும் 'ஏஎம்கேஎஃப்எஸ்சி கம்யூ னிட்டி சர்வீசஸ்' என்ற தன்னார்வ தொண்டூழிய நிறுவனம், குறை வருவாய் உள்ள மூத்தோருக்கு ஆதரவு அளிக்கின்ற தனது 'கம்நெட் மூத்த குடிமக்கள் சேவை செயல்திட்டம்' என்ற ஒரு திட்டத்தின் பகுதியாக நடத்திவருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!