தோக்கியோ: ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள முக்கிய சாலைகள் பழுதடைந்ததன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 45 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
ஜப்பானில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதியிலிருந்து குடியிருப்பாளர்களைக் காப்பாற்றும் பணியில் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 48,000 போலிசாரும் தீயணைப்பாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்