ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பாஜகவின் பிரம் மாண்ட பொதுக்கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். மோடியின் வருகையை முன் னிட்டு அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுதவிர, பிரதமர் மோடி பேசும் கூட்டத்துக்காக ராஜஸ் தானில் உள்ள 33 மாவட்டங் களில் இருந்தும் ஆட்களை அழைத்து வரும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. சுமார் 3 லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்ற இலக்கு டன் அந்தப் பணி நடந்தது. அதையடுத்து, சுமார் 5,600 பேருந்துகள் மூலம் அவர்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப் பட்டுள்ளனர். இதற்காக ராஜஸ் தான் மாநில அரசு 7 கோடி ரூபாய் செலவு செய்து இருப்ப தாகக் கூறப்படுகிறது.
ஒரு கிலோ மீட்டருக்குத் தலா ரூ.20 உதவி வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்தச் செலவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் பணம் இப்படி செலவு செய்யப்பட்டதற்கு காங். உட்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.