தாய்லாந்து: இடைவிடாத மீட்புப் பணி

வடக்கு தாய்லாந்தில் குகைக்குள் இரு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் அவர்களின் காற் பந்து பயிற்றுநரையும் மீட்கும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டு தவிக்கும் குகைக்கு மேல் காட்டில் மலைப் பகுதியைக் கண்டறிந்து குடையும் முயற்சியாக 100க்கு மேற்பட்ட துவாரங்கள் போடப்பட்டு உள்ள தாக மீட்புப் பணி தலைவர் கூறியுள்ளார்.

பலத்த மழை பெய்யக்கூடும் என்று முன் னுரைக்கப்பட்டு இருப்பதால் அதற்கு முன்னரே 13 பேரையும் மீட்கும் பணி வேகமடைந்து வருவதாக அவர் சொன்னார். "இன்னும் ஒன்றிரண்டு நாளில் அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டு வரு கிறோம்," என்று நாரோங்சாக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்தார்.

நேரத்தைக் கவனத்தில் கொண்டே எல்லா வேலைகளும் நடந்துவருவதாக குகை அமைந்திருக் கும் வனப்பூங்காவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். மழை வருவதற்குள் தங்களது வேலை களை முடிக்கும் குறிக்கோளுடன் தமது குழு மலை மீது முகாமிட்டு இருப்பதாக கமோடசாய் கோட்சா என்னும் அவர் கூறினார். "மலை மேலி ருந்து சிறுவர்களை மீட்கும் முயற்சி இதுவரை மேற்கொள்ளப்படாத ஒன்று. தரைக்கடியிலுள்ள குகை வளாகத்தில் மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்தால் மீட்புப் பணிகள் சிக்கலடையும். எனவே மாற்றுவழிகளை மேற்கொண்டு இருக் கிறோம்," என்றார் அவர்.

சில உலோகத் தண்டுகள் 400 மீட்டர் வரை கீழே சென்றுவிட்டன. இருப்பினும் 13 பேரின் இடத்தை அவற்றால் அடைய முடியவில்லை என்று நரோங்சாக் செய்தியாளர்களிடம் கூறினார். இன் னும் கீழே சென்று அங்குள்ளோரைக் கண்டறியும் அளவுக்குத் தொழில்நுட்பத் திறன்கள் போத வில்லை என்றும் அவர் தெரிவித்தார். "மலை உச்சியிலிருந்து கிட்டத்தட்ட 600 மீட்டர் ஆழத்தில் குகை வளாகம் இருப்பதாக மதிப்பிடு கிறோம். இருப்பினும் அதுதான் உண்மையான இலக்கு என்று உறுதியாகத் தெரியவில்லை," என் றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குகைக்குள் மாட்டிக்கொண்டு உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோருக்கு எழு திய கடிதங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. "கவலைப்படாதீர்கள், நாங்கள் பத்திரமாகவும் துணிச்சலாகவும் உள்ளோம்," என்று அவர்கள் அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர். "ஆசிரி யரே, நாங்கள் வந்த பின்னர் எங்களுக்கு அதிக வீட்டுப் பாடங்களைத் தராதீர்கள்," என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25 வயது பயிற்றுநர் எழுதிய கடிதத்தில், "சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். என்னால் முடிந்தவரை அவர்களைக் கவனித்துக் கொள்வேன்," என்று கூறியுள்ளார்.

மலைப்பிரதேசத்தில் இருந்து 400 மீட்டர் வரை துவாரமிட்டு குடைந்தபோதிலும் சிறுவர்கள் மாட்டிக் கொண்டிருக்கும் பகுதி கண்டறியப்பட வில்லை. மேலும் 200 மீட்டர் குடைய வேண்டி இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதி யில் நூற்றுக்கு மேற்பட்ட துவாரங்கள் போடும் பணியில் மீட்புப் படையினர் ஈடு பட்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!