ஹேல்ஸ் அதிரடி ஆட்டம்

கார்டிஃப்: முதல் போட்டியில் சிறப் பாகச் செயல்பட்ட முன்வரிசைப் பந்தடிப்பாளர்கள் சோபிக்காததா லும் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து அணியினர் திறம்பட எதிர்கொண் டதாலும் இரண்டாவது டி20 கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை இழக்க நேரிட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று அதி காலை நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் வெல்வதன்மூலம் தொடரைக் கைப்பற்றும் ஆவலுடன் அவ்வணி களமிறங்கியது.

பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் இந்திய அணியை முதலில் பந்தடிக்கப் பணித்தார். ரோகித் சர்மா (5), ‌ஷிகர் தவான் (10), லோகேஷ் ராகுல் (6) என விரைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா. இந்நிலையில், 4வது விக்கெட்டுக்கு கோஹ்லியும் ரெய்னாவும் சேர்ந்து 57 ஓட்டங்களைச் சேர்க்க, இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. கோஹ்லி 47 ஓட்டங்களிலும் ரெய்னா 27 ஓட்டங்களிலும் ஆட்ட மிழந்தனர்.

கடைசியில் டோனி (32*) சற்று அதிரடியாக ஆட, இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை எடுத்தது. இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியும் தொடக்க முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும், ஒருமுனையில் அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானமாக ஆட, அவருக்கு மோர்கனும் (17) பேர்ஸ்டோவும் (27) உறுதுணையாக இருந்தனர். இதனால், இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இங்கி லாந்து வெற்றியைச் சுவைத்தது. இறுதி டி20 போட்டி இன்றிரவு 9 மணிக்குத் தொடங்குகிறது.

41 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சருடன் 58 ஓட்டங்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்த அலெக்ஸ் ஹேல்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!