பரதன்: பெரும் மனநிறைவளித்த ‘சிண்டா’ பதவிக்காலம்

வீ. பழனிச்சாமி

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் 25 ஆண்டுகள், சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையில் ஒன்பது மாதங்கள் - இந்த அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு சிண்டாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் தலைமை நிர்வாக அதிகாரியாகக் காலடி எடுத்து வைத்த திரு கே. பரதனுக்கு சவால்கள் காத்திருந்தன.

சிண்டா வழி நடத்தும் திட்டங் கள் பற்றி மக்களுக்கு எவ்வாறு எடுத்துரைப்பது, அத்திட்டங்களில் சேர அவர்களை எவ்வாறு ஊக்கு விப்பது முதலியவை முதற்கட்ட சவாலாக இருந்தது. "அவ்வாறு திட்டங்களில் சேரும் மக்களின் எண்ணிக்கையை விட அத்திட்டங்களால் அவர்கள் பயன் அடைகிறார்களா என்பதே எனது முக்கிய இலக்காக இருந்தது. "ஆக, கல்விப் பிரிவில் குறைந்த வருமான குடும்பங்களிலி ருந்து வரும் மாணவர்கள், கல்வி யில் சிறப்பாக செய்யாத மாணவர் கள் என அதிக கவனம் செலுத்கக் கூடிய இரு திட்டங்களை அறி முகப்படுத்தினேன்.

"இளையர் பிரிவில் கல்வியில் சிறப்பாகச் செய்யாத மாணவர்கள், குடும்பப் பிரிவில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவுதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சமூகத்தை எடுத்துக்கொண்டால் எங்கள் திட் டங்களில் இன்னும் பொருத்தமான சமூக பங்காளிகளைச் சேர்த்துக் கொள்ள தீர்மானித்தோம்," என் றார் திரு பரதன்.

"உதாரணத்துக்கு, சமூக பங் காளிகள் அளிக்கும் கல்வி உதவி நிதியுடன் மாணவர்கள் சிண்டா வின் துணைப்பாட வகுப்புகளில் சேர்ந்து பயில வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். இப் படியாக, சமூக பங்காளிகளுடன் பல திட்டங்களில் இணைந்து செயலாற்றினோம்," என்று விவ ரித்த திரு பரதன், ஈராண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய மற்றொரு திட்டம் பற்றியும் கூறினார். "முன்பெல்லாம் உதவி நாடும் மக்கள் சிண்டாவுக்கு வர வேண் டும். ஆனால், இப்போது சிண்டா வில் உள்ள நாங்கள் உதவி தேவைப்படும் மக்களை நாடிச் செல்கிறோம். அந்த அடிப்படையில் தான் சிண்டா பேருந்துத் திட்டம் அறிமுகமானது.

"ஒரு குடும்பத்தில் பிரச்சினை உருவெடுக்குமேயானால், அதில் அதிகம் பாதிக்கப்படுவது அக் குடும்பத்தின் பிள்ளைகள்தான். ஆக, பிள்ளைகளை மையப்பொரு ளாக வைத்தே சிண்டாவின் உதவிகள் அமைக்கப்பட்டன. "ஆக, பிள்ளைக்கு மூன்று வயதாக இருக்கும்போதிலிருந்தே அதன் கல்விப் பயணத்தில் சிண்டா அக்கறை காட்டுகிறது. இத்திட்டத்தில் 3,600 பிள்ளை களைச் சேர்ப்பதே இலக்கு. குறைந்த வருமானக் குடும்பங் களில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிண்டா 'குழந்தை பரிசுக்கூடை' கொடுத்து, அவர்களையும் அவர் களின் பெற்றோரையும் தங்கள் பார்வைக்குள் வைத்துக்கொள் ளும்," என்றார் திரு பரதன்.

கடந்த ஆண்டு வரை சிண்டா தனது துணைப் பாட வகுப்புகளை 20 பள்ளிகளில் நடத்தியது. அதற் கான ஆதரவு பெருகி வருவதால், இந்த ஆண்டு பள்ளிகளின் எண் ணிக்கையை 23க்கு உயர்த்த சிண்டா எண்ணம் கொண்டுள்ளது. துணைப் பாட வகுப்புகளில் 10-12 மாணவர்கள்தான் இருப்பார் கள். அவர்களுக்கான பாடத்திட் டம் சிண்டாவின் கல்விப் பிரிவால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் திரு பரதன் பகிர்ந்துகொண்டார்.

மாணவர்களுக்குப் பாடங்களில் உதவி செய்ய 25 நிலையங்களில் 'புரோஜெக்ட் கைட்' வழிகாட்டித் திட்டத்தில் மாணவர்கள் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் இருப்பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!