சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் அரசுக்கு கடந்த 11 மாதங் களில் 60,430 கோடி ரூபாய் வரு வாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை சார்பில் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை ஒரு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தமிழக மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் சி.பி. ராவ், "ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்து பவர்களின் எண்ணிக்கை 9 லட் சத்து 80 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது," என்றார்.
"ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான ஒன்பது மாத காலத் தில் மாநில அரசுக்கு 26,227 கோடி ரூபாயும் மத்திய அரசுக்கு 24,745 கோடி ரூபாயும் என மொத்தத்தில் 50,972 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. "கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 9,458 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 60 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருக்கிறது," என்று திரு சி.பி. ராவ் குறிப்பிட்டார்.