குகையிலிருந்து சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் வெள்ளம் புகுந்துவிட்ட குகையில் பல நாட்களாக சிக்கிக்கொண்டு இருக்கும் 13 பேரில் நேற்றிரவு 10 மணி வரை நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட் கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குகைக் குள் சென்று இருக்கும் 18 முக்குளிப் பாளர்கள் எஞ்சியோரையும் மீட்க பரபரப் பாக முயன்றுகொண்டிருந்தனர்.

மறுபடியும் மழை வந்து நேற்று மிரட்டிய தால் அச்சம் தலைதூக்கிய நிலையில், மீட்புப் பணிகள் அதிவிரைவாக நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. தாய்லாந்தில் வடக்குப்புற சியாங் ராய் மாநிலத்தில் இருக்கும் மே சாய் மாவட் டத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகை யில் கடந்த பல நாட்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்களையும் காற்பந்துப் பயிற்று விப்பாளர் ஒருவரையும் வெளிக்கொணர நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. முக்குளிப்பாளர்கள் 18 பேர் குகைக்குள் அனுப்பப்பட்டனர்.

குகைக்கு உள்ளே சென்றிருக்கும் முக்குளிப்பாளர்களில் 13 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐவர் தாய்லாந்துக்காரர்கள். அவர்கள், உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 10 மணிக்கு குகைக்குள் சென் றதாக அந்தப் பகுதியில் நடந்த செய்தி யாளர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. மீட்புப்பணிகளுக்குத் தலைமை தாங் கும் முன்னாள் மாநில ஆளுநர் நரோங்சாக், "எல்லாம் தயாராகிவிட்டது. பையன்களும் தயாராகிவிட்டார்கள். அவர்கள் வெளியே வர ஆயத்தமாக இருக்கிறார்கள். மருத்து வர்கள், உதவியாளர்கள் ஆகியோருடன் பெற்றோரும் தயாராக இருக்கிறார்கள்," என்று முன்னதாக தெரிவித்தார்.

பையன்களை மீட்க ஞாயிற்றுக்கிழமை (நேற்று) பொருத்தமான சூழ்நிலை நிலவிய தாக அவர் கூறினார். குகைக்குள் பெரும் பகுதியில் நடந்தே வந்துவிடக்கூடிய நிலை இருந்தது என்றார் அவர். சிறுவர்களை எப்படி மீட்பது என்பது பற்றி சனிக்கிழமை முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மீட்பு நடவடிக்கை பற்றி பையன்களின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு மேலாக குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களில் சிலர் நேற்று இரவு மீட்கப்பட்ட பின்னர் சியாங் ராய் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையை நோக்கிச் செல்லும் ஆம்புலன்ஸ். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!