உலக நகரங்கள் உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கியதில் புத்தாக்கமும் நகர்ப்புற வாழ்க்கைத் திட்டமிடுதலில் ஏற்படும் தடை களும் முக்கிய விவகாரங்களாகப் பேசப்பட்டன. மரினா பே சேண்ட்ஸில் நிகழும் இந்த உலக நகரங்கள் உச்சநிலை மாநாட்டுடன் சிங்கப்பூர் அனைத் துலகத் தண்ணீர் வாரமும் 'கிளீன்என்வைரோ' உச்சநிலை மாநாடும் நடைபெறுகின்றன. நிகழ் வுகளில் நூறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படு கிறது. மொத்தம் 117 நகரங்களிலிருந்து 122 தலைவர்கள் வருகை தந்த 'மேயர்ஸ் ஃபாரம்', 40 நகரங் களைச் சேர்ந்த 90 பேர் கலந்து கொண்ட இளம் தலைவர்கள் கலந்தாய்வரங்கு உலக நகரங்கள் உச்சநிலை மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக நேற்று நடந்தேறின. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் மேயர்களுக்கான கருத்தரங்கை வழிநடத்தினார். இளம் தலைவர்கள் கலந்தாய் வரங்கு சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச் சருமான டெஸ்மண்ட் லீயால் வழி நடத்தப்பட்டது. ''அதிவேகத்தில் நம் கண்முன் தொழில்நுட்ப முன் னேற்றங்கள் நிகழ்ந்து வரு கின்றன.
"அவை யாவும் நம் நகரங் களைப் புதுவிதமாகக் கற்பனை செய்யவும் மாற்றி அமைக்கவும் உதவுகின்றன,'' என்றார் திரு வோங். ஆசியான் ஸ்மார்ட் சிட்டி நெட்வொர்க் எனப்படும் அமைப்பு மின்னிலக்க உள்கட்டமைப்பையும் சேவைகளையும் மேலும் சிறப்பாகத் தொடர்புபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்புத் திட்டங்களுக் காக எவ்வாறு மேயர்கள் நிதி பெற லாம் என்பது குறித்தும் பேசப்பட் டது. பகிர்வு சைக்கிள் சேவையை உதாரணமாகச் சுட்டிய திரு லீ புத்தாக்கத்திற்கு ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் செலவுகள் பற்றி கலந்துகொண்ட 30 வயதி லிருந்து 45 வயது வரையிலான இளம் தலைவர்களிடம் பேசினார். ஒரு நகரத்தின் மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கும் புத்தாக்க முயற்சி களை அரசாங்கம் எதிர்க்கக் கூடாது என்றும் அவர் கூறினார். ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் இம்மாநாடு வியாழக்கிழமை முடி வுறும்.
மேயர்களுக்கான கருத்தரங்கில் தேசிய வளர்ச்சி அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான லாரன்ஸ் வோங்குடன் இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்