மம்தா பானர்ஜி: காங்கிரசுடன் இணைந்து செயல்படத் தயார் கோல்கத்தா: பாஜகவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி சேர்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மம்தா பானர்ஜி தனது எதிர் கால அரசியல் வியூகம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித் துள்ளார்.
"பாஜக அராஜகம் செய்வதோடு மக்களைத் துன்புறுத்துகிறது. பாஜகவைச் சேர்ந்த சிலரே அந்தக் கட்சியை ஆதரிப்பதில்லை. அக் கட்சி நூறு ஹிட்லர்கள் சேர்ந்தார் போல் செயல்படுகிறது. அக் கட்சியை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. "எந்தவொரு கட்சியின் நோக் கம், கொள்கை, சித்தாந்தம் ஆகி யவை தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவருடனும் இணைந்து செயல்படுவதே எனது நோக்கம்.
"ஆனால், கூட்டாட்சி முன் னணியைப் பொறுத்தவரையில் அது எனது தனிப்பட்ட முடிவாக இருக்காது. அது, மாநிலக் கட் சிகள் அனைத்தின் முடிவாகவும் இருக்கவேண்டும். சில மாநில கட்சிகள் தங்களுக்கு மாநிலத்தில் இருக்கும் நெருக்கடி காரணமாக காங்கிரசுக்கு ஆதரவளிக்காமல் இருக்கலாம். அவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை. மாறாக, பாஜக வுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவோம் என்றுதான் கூறுகிறேன்.