'சரவணன் மீனாட்சி' தொலைக் காட்சித் தொடர் மூலம் பிரபலமா னவர் கவின். தற்போது 'நட்புனா என்னானு தெரியுமா' படம் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார். இது நட்பு, காதல் ஆகிய இரண்டின் சிறப்பையும் சொல்லும் படமாம். அதே சமயம் காதலை விட நட்புக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தில் கவின் ஜோடி யாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் அருண் ராஜா காமராஜ், ராஜு, இளவரசு, மொட்ட ராஜேந்திரன், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
"சினிமாவுக்கும் சின்னத் திரைக்கும் ரொம்பப் பெரிய வித்தியாசம் இல்லை. "இரண்டிலுமே காதல் காட்சி கள் இடம்பெறுகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் காதலிப்பது சுலபம். ஆனால் சினிமாவிலோ நாயகியை நெருங்கினால் தான் காதல். "சினிமா நாயகியைத் தொட்டு நடிக்க சிரமப்பட்டேன். ஆனால் ரம்யா நம்பீசன் எந்தவித பந்தாவும் இல்லாமல் என்னுடன் நன்றாகப் பழகினார். நான் புதுமுகம் என்றெல்லாம் பாராமல் இயல்பாக நடிக்க தன்னால் இயன்ற ஒத்துழைப்பைத் தந்தார். இதற்கு நன்றி சொல்ல வேண்டும்," என்கிறார் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் ஆகியோரின் வரிசையில் தன்னாலும் சாதிக்க முடியும் என்று நம்புகிறாராம் கவின்.
'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் கவின், ரம்யா நம்பீசன்.