சமாரா: 1990ஆம் ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பாபி ராப்சனின் தலைமையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து. அந்த ஆட்டத்தில் ஜெர்மனியிடம் அது பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்றது. அதனைத் தொடர்ந்து, உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கி லாந்துக்கு பெருத்த ஏமாற்றத் தையே தந்தன. ஆனால் இவ்வாண்டு நிலைமை மாறிவிட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நிர்வாகி கேரத் சௌத்கேட்டின் வியூகம், கிண்ணம் வெல்ல வேண்டும் என இளம் வீரர்கள் கொண்டிருக்கும் முனைப்பு ஆகியவை நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் சுவீடனைத் தடுமாறச் செய்தது.
சுவீடன் வீரர்கள் துவளாமல் தாக்குதல்களை நடத்தியபோதும் அவர்களது கோல் முயற்சிகளைத் தவிடுபொடியாக்கினார் இங்கி லாந்தின் கோல்காப்பாளர் ஜோர் டன் பிக்ஃபர்ட். வலைக்குள் செல்ல இருந்த பந்தை அவர் பலமுறை பாய்ந்து வெளியே தட்டிவிட்டார். இது இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் மூலம் பெனால்டி எல்லைக்குள் ஏஷ்லி யங் அனுப்பிய பந்தை தலையால் முட்டி கோல் போட்டார் மெக்வாயர்.
இதுவே இங்கிலாந்துக்காக மெக்வாயர் போட்ட முதல் கோல். இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்துக்குச் சாதகமாக இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் ஆட்டத்தைச் சமன் செய்ய சுவீடன் கொண்டிருந்த கனவைத் தகர்த்தினார் இங்கிலாந்தின் டெலி அலி. 59வது நிமிடத்தில் அவர் கோல் போட்டார். ஜெசி லிங்கார்ட் அனுப்பிய பந்தை அவர் தலையால் முட்ட, பந்து வலையைத் தீண்டியது. சுவீடனால் இறுதி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போக, 2-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது இங்கிலாந்து.
பந்தைத் தலையால் முட்டி இங்கிலாந்தின் இரண்டாவது கோலைப் போடும் டெலி அலி (நடுவில்). இந்த கோல் சுவீடன் அணியை நிலைகுலைய வைத்தது மட்டுமல்லாது இங்கிலாந்தின் வெற்றியையும் உறுதி செய்தது. படம்: ராய்ட்டர்ஸ்