ரஷ்யாவின் கதையை முடித்த குரோவே‌ஷியா

சோச்சி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யாவைத் தோற்கடித்து போட்டியிலிருந்து வெளியேற்றி உள்ளது குரோவே‌ஷியா. நேற்று அதிகாலை சோச்சி நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவுக்கும் குரோவே‌ஷியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு குழுக்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடிய ஆட்டம் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ் பிரமிப்பூட்டும் வகையில் கோல் போட்டு தமது குழுவை முன்னி லைக்குக் கொண்டு சென்றார். நல்ல துவக்கத்தைக் கண்டு விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த ரஷ்ய ரசிகர்கள் அரையிறுதியைப் பற்றி கனவு காண ஆரம்பித்தனர். ஆனால் எட்டு நிமிடங்கள் கழித்து குரோவே‌ஷியாவின் கிராமேரிச் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். கூடுதல் நேரத்தில் குரோ வே‌ஷிய வீரர் விடா தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது.

இத்துடன் ரஷ்யாவின் கதை முடிந்தது என்று கருதப்பட்டபோது கூடுதல் நேரம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் ரஷ்யா ஆட்டத்தைச் சமன் செய்தது. ரஷ்யாவின் ஃபெர்னாண்டஸ் தலையால் முட்டி கோல் போட்டார். இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ‌ஷூட்அவுட் நடத்தப்பட்டது. காலிறுதிக்கு முந்திய ஆட்டத் தில் டென்மார்க்கை பெனால்டி ‌ஷூட்அவுட்டில் தோற்கடித் திருந்தது குரோவே‌ஷியா. அதே போல ஸ்பெயினை ரஷ்யா பெனால்டி ‌ஷூட்அவுட்டில் வீழ்த்தியிருந்தது.

மாஸ்கோவில் உள்ள ஓர் உணவகத்தில் காலிறுதி ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்த ரஷ்ய ரசிகர்கள் தங்கள் குழு பெனால்டி ‌ஷூட்அவுட்டில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியதும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!