சியாங் ராய்: தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் 12 சிறுவர் களை அழைத்துச் சென்றதற்காக அவர்களது பயிற்றுவிப்பாளரான 25 வயது எக்காபோல் சந்தவோங் கைக் கடிந்துகொண்டாலும் குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்ததற்கு அவரே முக்கிய காரணம் என்று ஒருசாரார் குறிப் பிடுகின்றனர். பெற்றோரை இழந்த அவர், தமது 10வது வயதில் பௌத்த பிக்குவாக மாறியதாகக் கூறப் படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த மடத்திலிருந்து வெளியேறி தமது பாட்டியைக் கவனித்துக்கொண்டிருந்த அவர், அப்பகுதியில் உள்ள திறமை மிகுந்த சிறுவர்களுக்கு கல்வியில் ஊக்கமும் விளையாட்டில் பயிற்சி யும் அளித்து வந்தார்.
குகையில் சிக்கியிருந்த சிறு வர்கள்மீது மிகுந்த பாசம்கொண்ட அவர், தமது பங்கு உணவையும் சிறுவர்களுக்கு வழங் கியதுடன் தியானம் செய்து ஆற்றலைத் தேக்கிவைக்க ஊக்கம் அளித்ததாலேயே சிறுவர்களால் பிழைத்திருக்க முடிந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். குகைக்குள் இருந்தவர்களிலேயே அவர் மிக வும் வலுவிழந்து காணப்பட்டதாக மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "குகையிலிருந்து வெளியான பிறகு அவர்மீது குற் றஞ்ட்டப் போவதில்லை; மாறாக அவருக்கு ஆறுதலாக இருப்பேன்," என்று குகையில் இருக்கும் ஒரு சிறுவனின் தாய் கூறியுள்ளார்.