‘முழுமையான அணுவாயுதக் களைவுவரை தடைகள் தொடரும்’

தோக்கியோ: வடகொரியா முழுமை யான, சரிபார்க்கத்தக்க, மாற்ற முடியாத வகையில் அணுவாயுதக் களைவை மேற்கொள்ளும்வரை அதன் மீதான தடைகள் நீடிக்கும் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் குறிப் பிட்டுள்ளன. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, தென்கொரிய வெளி யுறவு அமைச்சர் டாக்டர் காங் கியுங் வா ஆகியோர் வடகொரியா வின் ஆயுதக் களைவு மீது கொண்டிருக்கும் ஒத்துழைப்பு வலுவாக இருப்பதைக் குறிப்பிட்டு இதைத் தெரிவித்துள்ளனர்.

"வடகொரியா மீதான தடை களைத் தொடர்ந்து செயல்படுத்து வதை மற்ற நாடுகளுக்கு இந்த மூன்று நாடுகளும் நினைவூட்டும். வடகொரியாவுடனான பேச்சுவார்த் தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும் அது மட்டுமே தடைகளைத் தளர்த் துவதற்குப் போதுமானதாக இருக் காது. தென்கொரியா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளுக்கு வழங்கப் படும் வலுவான தற்காப்பு தொட ரும்," என்று திரு போம்பியோ நேற்றைய செய்தியாளர் கூட்டத் தில் தெரிவித்தார். டிரம்ப்-கிம் இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதன் தொடர்பிலான பேச்சுவார்த்தைக் காக திரு போம்பியோ இரண்டு நாள் பயணமாக கடந்த வெள்ளிக் கிழமை பியோங்யாங் சென்றிருந் தார். அங்கு வடகொரியாவின் முன்னாள் ஒற்றர்படைத் தலைவர் கிம் யோங் சோலைச் சந்தித்து உரையாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!