கெய்ரோ: பாலியல் துன்புறுத்தல், எகிப்தில் நிலவும் சூழல் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றிய லெபனானிய சுற்றுப் பயணி ஒருவருக்கு எகிப்தில் 8 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோனா எல்-மஸ்போ எனும் 24 வயதுப் பெண் கடந்த மாதம் கெய்ரோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். டாக்சியில் ஓட்டுநர்கள், தெருக்களில் இளம் ஆடவர் தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் ரமலான் மாதத்தில் உணவகத்தில் மோசமான சேவை வழங்கப்பட்டதாகவும் ஒரு சமயம் தம்முடைய பணம் திருட்டுப் போனதாகவும் மஸ்போ குற்றஞ்சாட்டினார்.
சமுதாயத்திற்குத் தீங்கிழைக்கக்கூடிய போலியான கருத்துகளை வேண்டு மென்றே மஸ்போ பரப்பியதாக நீதித்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டன. இந்த மாதம் 29ஆம் தேதி அவரது வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும். 2006ஆம் ஆண்டு மஸ்போவின் மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை எனவும் அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் காரணமாக அவரால் கோபத்தைக் கட்டுப் படுத்த இயலவில்லை எனவும் அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.