10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்

ப. பாலசுப்பிரமணியம்

நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில் முன்னேறிவிடும் என்ற எண்ணத்தில் மாஸ்கோ வின் லுஸ்னிக்கி அரங்கில் 'குரூப் எஃப்' ஆட்டத்திற்காக காத்திருந் தார் 27 வயது விக்னராஜ் ராஜேந்திரன். அடுத்த 90 நிமிடங்களுக்கு என்ன நடக்குமென்று அவர் எதிர் பார்த்தாரோ அது நடக்கவில்லை. மெக்சிகோவின் அதிரடித் தாக் குதல்கள் ஜெர்மானிய தற்காப்பு ஆட்டக்காரர்களைத் திக்குமுக் காட வைத்தது.

மெக்சிகோவின் தாக்குதல் ஆட்டக்காரர் லொசானோ அடித்த அற்புதமான கோல் மூலம் ஆட் டத்தை 1-0 என்ற கோல் கணக் கில் வென்றது மெக்சிகோ. 1982லிருந்து உலகக் கிண்ண முதல் ஆட்டத்தில் ஜெர்மனி தோல்வி அடைந்த சரித்திரமே இல்லை.

இந்த விறுவிறுப்பான ஆட் டத்தை நேரில் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார் விக்னராஜ். உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளின் முதல் 'குரூப்' சுற்றில் 8 ஆட்டங்களை நேரில் கண்ட பாக்கியசாலி இவர். தாம் பார்த்த 8 ஆட்டங்களில் இதுதான் சிறந்தது என்கிறார் இந்த உணவக நிர்வாகி. "மெக்சிகோ ரசிகர்களுக்கு ஈடாக எந்த நாட்டுக் காற்பந்து ரசிகர்களும் இல்லை. ஆட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை உற்சாகம் குறையாமல் குழுவுக்கு ஆதரவளித்தனர்.

"வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாது எப்போதும் கொண்டாட்ட உணர்விலேயே அவர்கள் இருந்த விதம் பாராட் டுக்குரியது," என இரு வாரங் களுக்கும் மேலாக ரஷ்ய உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்த்து ரசித்த அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

மாஸ்கோவின் லுஸ்னிக்கி அரங்கில் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளின் முதல் ஆட்டத்தைப் பார்த்த (இடமிருந்து) விக்னராஜின் நண்பர் ஜொயெல் ஜான்சன், தந்தையின் நண்பர் எஸ்.ஏகாம்பரம், தந்தை ராஜேந்திரன் ராஜூ, விக்னராஜ் ராஜேந்திரன். படம்: விக்னராஜ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!