You are here

அமைச்சர்: வர்த்தகப் போர் மிரட்டல் காரணமாக சிங்கப்பூர் பெரும் கவலை

  • படம்: சாவ் பாவ்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடைப் பட்ட வர்த்தகப் போர் காரணமாக உலகப் பொருளியல் கணிசமாகப் பாதிக்கப்படும். நிதிச் சந்தைகள் நிலையில்லாமல் போகும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார். அந்த நிலவரத்தைப் பெரும் கவலை யுடன் சிங்கப்பூர் கண்காணித்து வர வேண்டிய சூழல் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வர்த்தகம் தொடர்பான முரண்பாடு களுக்குத் தீர்வுகாண உலக வர்த்தக நிறுவனத்தின்கீழ் வழிமுறைகள் இருக் கின்றன என்பதைச் சுட்டிய அவர், இத் தகைய பிரச்சினைகள் வலுவடையக் கூடாது என்று தெரிவித்தார்.

அமைச்சர், நேற்று பட்டாளிக் கட்சி வசம் உள்ள அல்ஜுனிட் குழுத்தொகுதி யில் உள்ள காக்கி புக்கிட் பகுதிக்கு வருகை அளித்தார். அப்போது செய்தி யாளர்களுக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளும் பதற்றத்தைக் குறைக் கும் வகையில் நடந்துகொள்ளும் என்று திரு ஹெங் நம்பிக்கை தெரிவித்தார். வர்த்தகப் போரை தொடங்கிய தரப்புக் குக்கூட இதனால் நன்மை கிடையாது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல நெருக்கடிகளுக்குப் பிறகு உலகப் பொருளியல் இப்போதுதான் தலைதூக்கு வதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், நிதிச் சந்தைகள் இத்தகைய வர்த் தகப் பிரச்சினைகளை மிகவும் கவலை கண்கொண்டு நோக்கும் என்றார்.

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று பாட்டாளிக் கட்சி வசம் உள்ள அல்ஜுனிட் குழுத்தொகுதியில் இருக்கும் காக்கி புக்கிட் பகுதிக்கு வருகை அளித்தார். அப்போது அவர் குடியிருப்பாளர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடினார். குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவும் பற்றுச்சீட்டுத் திட்டம் ஒன்றையும் அவர் தொடங்கிவைத்தார். படம்: சாவ் பாவ்