You are here

மஞ்சிமா: காதல் செய்வேன்

  • மஞ்சிமா

இன்னும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் குறித்து தன்னால் யோசிக்க முடியும் என்கிறார் இளம் நாயகி மஞ்சிமா மோகன். எனினும் அது காதல் திருமணமாகத் தான் இருக்கும் என்றும் திட்டவட்டமாகச் சொல்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர் களுடன் உரையாடுவதில் விருப்பமுண்டு என்றாலும், சில ரசிகர்கள் கேட்கும் கேள்விகள் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறதாம். அண்மையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி மஞ்சிமாவுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருக்கிறது.

“கதாநாயகி குட்டையாக உடையணிந்தால் தானே ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள்? என்பதே அந்த ரசிகரின் கேள்வி. அவரைக் கடுமையாக ஏசிவிட்டேன். “கதை நன்றாக இருந்தாலோ, பிடித்த கதாநாயகன், நாயகி நடித்திருந்தாலோ, பாடல்கள் நன்றாக இருந்தாலோதான் மக்கள் படம் பார்க்க திரையரங்குக்கு வருவார்கள். “இது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு கேள்வியை அந்த ரசிகர் கேட்டிருக்கக்கூடாது,” என்று கொந்தளிப்புடன் மஞ்சிமா சொல்லும்போதே அவரது கோபம் இன்னும் குறையவில்லை என்பதை உணரமுடிகிறது. தற்போது தமிழில் இரண்டு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் மஞ்சிமா. அது குறித்த விவரங்கள் விரைவில் வெளி யாக உள்ளன.