You are here

வாசன்: கனிம வளங்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மக்கள் அச்சம்

சேலம்: விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களை அழிக்கும் திட்டம் தேவையா என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார். பசுமை வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பதாகத் தமிழக அரசு நாடக மாடி வருகிறது என்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குற்றம் சாட்டினார். “சேது சமுத்திரத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் முடங்கிக் கிடக்கும்போது பசுமை வழிச்சாலைத் திட்டத்தை அவசர அவசரமாகச் செயல்படுத்த நினைப்பது சந்தேகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

“இந்தத் திட்டத்தின் மூலம் கனிம வளங்களை வெளிநாடுக ளுக்கு எடுத்துச் செல்லவே இவ் வாறு அவசரம் காட்டப்படுவதாக மக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது,” என்றார் வாசன். தமிழக அரசு இத்திட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சரிவர விளக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், வாழ்வாதாரம் பறிபோகிறதே என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகள் மீது காவல் துறை உதவியுடன் தமிழக அரசு போர் தொடுப்பது கண்டனத்துக்கு உரியது என்றார். மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளத் தவறிய தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முடங்கியுள்ளதாகவும், விவசாயி களை அச்சுறுத்தும் வகையில் போடப்பட்ட வழக்குகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண் டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“முட்டை மற்றும் சத்துமாவு நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் நடத்தும் சோதனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந் துள்ளது தெரியவந்துள்ளது. “இதில் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,” என வாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன். படம்: ஊடகம்