சென்னை: மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுக ளில் இருந்து முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக புகார் கள் எழுந்ததை அடுத்து, ஆறு களில் மணல் அள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தனியார் நிறு வனம் ஒன்று மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை இறக் குமதி செய்தது. இந்த மணல் தற்போது தூத்துக்குடி துறை முகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனால் அத்தனி யார் நிறுவனம் உச்ச நீதிமன் றத்தை அணுகியது. இந்நிலை யில் திடீர் திருப்பமாக மலேசிய மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித் துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் இத்தகவல் இடம்பெற் றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அதன் பிறகு மணல் விலை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என் றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள் ளதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.