மஞ்சிமா: காதல் செய்வேன்

இன்னும் ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் குறித்து தன்னால் யோசிக்க முடியும் என்கிறார் இளம் நாயகி மஞ்சிமா மோகன். எனினும் அது காதல் திருமணமாகத் தான் இருக்கும் என்றும் திட்டவட்டமாகச் சொல்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர் களுடன் உரையாடுவதில் விருப்பமுண்டு என்றாலும், சில ரசிகர்கள் கேட்கும் கேள்விகள் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறதாம். அண்மையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி மஞ்சிமாவுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருக்கிறது.

"கதாநாயகி குட்டையாக உடையணிந்தால் தானே ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள்? என்பதே அந்த ரசிகரின் கேள்வி. அவரைக் கடுமையாக ஏசிவிட்டேன். "கதை நன்றாக இருந்தாலோ, பிடித்த கதாநாயகன், நாயகி நடித்திருந்தாலோ, பாடல்கள் நன்றாக இருந்தாலோதான் மக்கள் படம் பார்க்க திரையரங்குக்கு வருவார்கள். "இது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு கேள்வியை அந்த ரசிகர் கேட்டிருக்கக்கூடாது," என்று கொந்தளிப்புடன் மஞ்சிமா சொல்லும்போதே அவரது கோபம் இன்னும் குறையவில்லை என்பதை உணரமுடிகிறது. தற்போது தமிழில் இரண்டு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் மஞ்சிமா. அது குறித்த விவரங்கள் விரைவில் வெளி யாக உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!