கிளீன்என்வைரோ உச்சநிலை மாநாட்டில் சுற்றுப்புறச் சேவைத் துறையை நவீனப்படுத்துவதற்கான பங்காளித்துவத் திட்டத்தில் புதிதாக 11 அமைப்புகள் இணைந்துள்ளன. அவற்றில் மரினா பே சேண்ட்ஸ், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் ஆகியவை அடங்கும்.
புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு, திறன் மேம்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு போன்வற்றை மேம்படுத்த இந்த திட்டம் இலக்கு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது திட்டத்தின் நோக்கம்.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் மூப்படையும் மக்கட்தொகையால் ஏற்படும் சவால்களையும் குறைந்த உற்பத்திதிறனையும் சுற்றுப்புறச் சேவைத் துறை முறியடிக்க வேண்டும் என்றார் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.