கோலாலம்பூர்: முன்னைய அரசாங் கத்தில் அரசாங்க ஆதரவாளர் களுக்கு அரசு தொடர்புடைய அமைப்புகளில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. அந்த உயர் பதவி யில் அவர்களும் பெருத்த சம் பளத்தை வாங்கிவந்தனர். ஆனால் அந்தக்காலம் முடிந்துவிட்டது என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். "முன்னைய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையால் நிபு ணர் அல்லாத, வர்த்தகம் என்பதே என்னவென்று அறியாதவர்கள் பெருகிவிட்டனர். ஆனால் அவர்கள் உயர் பொறுப்புகளை வகிக்கின்றனர். இதனால் முழு நோக்கமும் தோல்வியடைந்து விட்டது," என்று ஹாங்காங்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
"அரசாங்கத் தொடர்புடைய அமைப்புகள் தவிர்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. ஆனால் இத்தகையோரின் சம்பளம் மட்டும் அதிக அளவில் உள்ளது. நிறுவனங்கள் லாபமடை கிறதா, நட்டமடைகிறதா என்ற கவலையும் இல்லாமல் அவர்கள் நன்றாக அனுபவிக்கின்றனர். "இதனால் அரசாங்கம் தொடர் பான அமைப்புகளில் புதிய நிபுணர் களை நியமிக்க தற்போதைய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் விரும்புகிறது. இருந்தாலும் அந்த அளவுக்கு சம்பளம் இருக்காது. அரசாங்க ஊழியர்களின் சம்பளத் தைவிட சற்றுக் கூடுதலாக இருக் கும். "சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு போனஸ் வழங்கப் படும். இல்லையென்றால் தற்போது உள்ள சம்பளத்தைகூட எதிர் பார்க்க முடியாது. நிர்வாகத்தை மாற்றி புதிய நிபுணர்களை நிய மிப்போம்," என்று பிரதமர் கூறி னார்.