மாஸ்கோ: உலகின் முன்னணி காற்பந்து நட்சத்திரமான அர் ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி யையே தடுத்து நிறுத்திய அனுபவம் கொண்ட தங்களால் இங்கிலாந்தின் ஹேரி கேனையும் சமாளிக்க முடியும் என்று குரோ வேஷிய அணியின் பயிற்றுவிப்பா ளர் ஸ்லாட்கோ டாலிச் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவின் லுஸ்னிகி விளையாட்டரங்கில் நாளை இரவு 2 மணிக்கு நடக்கவுள்ள இரண் டாவது அரையிறுதியில் குரோ வேஷியாவும் இங்கிலாந்தும் பலப் பரிட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், பலவீனங்கள் எதுவும் அப்பட்டமாகத் தெரியாத இங்கிலாந்து அணியில் இதுவரை ஆறு கோல்களை அடித்துள்ள அணித்தலைவர் ஹேரி கேனும் இன்னொரு தாக்குதல் ஆட்டக் காரர்களான ரஹீம் ஸ்டெர்லிங்கும் தங்களுக்குப் பெரும் அச்சுறுத் தலாக இருப்பர் என்று டாலிச் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், தங்களது பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள தாகக் கூறிய அவர், "இங்கிலாந்து அணியைக் கண்டு எங்களுக்குப் பயமில்லை," என்றும் சொன்னார்.