இறுதிக்கு முன்னேற இலக்கு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: இந்த உலகக் கிண்ணத் தொடரில் இது வரையில் மிகச் சிறந்த செயல் பாட்டை வெளிப்படுத்திய இரு அணிகளான பிரான்சும் பெல்ஜிய மும் இன்று பின்னிரவு 2 மணிக்கு நடக்கவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் பொருதுகின்றன. இது பெல்ஜியக் காற்பந்தின் பொற்காலம் என அழைக்கப்பட்டா லும் கடந்த இரு யூரோ கிண்ணத் தொடர்களிலும் 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கிண் ணத் தொடரிலும் அந்த அணி சறுக்கியது. ஆயினும், கிண்ணம் வெல்லும் எனப் பலராலும் எதிர் பார்க்கப்பட்ட பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் காலிறுதி ஆட்டத்தில் தோற்கடித்ததைப் பார்க்கும்போது இப்போதைய பெல்ஜிய அணி உலக வெற்றியாள ராக முடியும் எனும் நம்பிக்கையை அளித்துள்ளது.

முதல் சுற்றில் வெறும் மூன்று கோல்களை மட்டும் அடித்தபோதும் அடுத்த சுற்று ஆட்டங்களில் காட் டிய செயல்பாடு பிரான்ஸ் அணி யில் திறமை கொட்டிக் கிடப்பதை உணர்த்துவதாக அமைந்தது.

காலிறுதிச் சுற்றில் கோலடித்த பெல்ஜியத்தின் கெவின் டி பிரய்ன (இடது), பிரான்சின் அன்டோய்ன் கிரீஸ்மன் ஆகிய இருவரும் அரையிறுதிப் போட்டியிலும் தத்தம் அணிகளின் துருப்புச்சீட்டுகளாக விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

மேலும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!