சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அதிவேக ரயில் திட் டத்தின் முடிவு என்னவாக இருந் தாலும் ஜூரோங் லேக் வட்டாரத் தின் தொலைநோக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். சிங்கப்பூரின் இரண்டாவது மத் திய வர்த்தக வட்டாரமாகத் திக ழும் என்று கருதப்பட்ட ஜூரோங் லேக் வட்டாரத்தின் மையப் பகுதி யாக அதிவேக ரயில் முனையம் இருக்கும் என்றும் திரு வோங் சொன்னார். மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அதிவேக ரயில் திட்டம் கைவிடப்படும் என்று அறிவித்த வுடன் ஜூரோங் லேக் வட்டாரத் தின் மேம்பாடு பாதிக்கப்படலாம் என்று பரவலான கவலை தலை தூக்கியது.
ஆனால், ஜூரோங் லேக் வட்டா ரத்தின் முழுமையான தொலை நோக்கில் மாற்றம் ஏற்படாது என்று திரு வோங் உறுதியளித்தார்.
சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் ஜூரோங் லேக் வட்டாரத்தின் மாதிரி வரைபடம். படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்