கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதி வேக ரயில் திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூர் இதுவரை $250 மில்லிய னைச் செலவு செய்துள்ளது என் றும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மேலும் சுமார் $40 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதிவேக ரயில் திட்டம் பற்றிய நிலவரம் குறித்து மன்ற உறுப்பினர் கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக் குப் பதிலளித்த திரு கோ, "இப் போதைக்கு திட்டத்துக்கான செல வுகள் $250 மில்லியனைத் தாண்டி விட்டது.
"இந்தப் பணம் பொதுமக்க ளின் வரிப்பணம். ஒருவேளை அதிவேக ரயில் திட்டம் மேற்கொள் ளப்படவில்லை என்றால், செல வழிக்கப்பட வேண்டிய பணத்தை நாம் மிச்சப்படுத்தலாம். ஆனால் இதுவரை செலவழித்த குறிப்பிடத் தக்க தொகையை மீட்டுக்கொள்ள முடியாது. ரயில் திட்டம் மேற்கொள் ளப்படவில்லை என்றால் அது முற்றிலும் வீணடிக்கப்பட்ட தொகையாகி விடும்," என்று விளக்கினார்.
கோலாலம்பூர்=-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டப் பாதையில் உள்ள பத்து பகாட் நிலையத்தின் மாதிரி வரைபடம். படம்: ஃபெரெல்ஸ்