You are here

பாக்யராஜ்: பிரச்சினை இருந்தால்தான் வெற்றி ருசிக்கும்

“வெயிலில் சுற்றினால்தான் நிழ லின் அருமை தெரியும் என்பது போல், பிரச்சினைக்குப் பிறகு தான் வெற்றியின் ருசியை நன்றாக அனுபவிக்க முடியும்,” என்றார் இயக்குநர் பாக்யராஜ். நேற்று முன்தினம் சென்னை யில் நடைபெற்ற ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்ற புதுப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரச்சினைகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

“இப்படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டதாகக் கூறினார். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள் ளுங்கள். பிரச்சினை இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றிகள் வரும். அந்த வெற்றியை ரசிக்க வும் முடியும்.

“நான் என் டைரியில், ‘பிரச்சினைகள் நிறுத்தக் கோடு கள் அல்ல; அவை வழிகாட்டிக் கோடுகள்’ என்று எழுதி வைத்திருப்பேன். ‘பதினாறு வயதினிலே’ எங்கள் இயக்குநர் பாரதிராஜாவுக்கு முதல் படம். உதவி இயக்குநராக எனக்கும் அதுவே முதல் படம்.