You are here

‘ஹென்ரி எங்களுடன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’

அனைத்துலகக் காற்பந்து ஆட்டங்களில் பிரான்சுக்காக ஆக அதிகமாக 51 கோல்களை அடித்திருக்கும் தியரி ஹென்ரி (படம்) இப்போது பெல்ஜியம் அணியின் துணைப் பயிற்று விப்பாளராக இருந்து வரு கிறார். தன்னை மெருகேற்றி யதில் ஹென்ரிக்குப் பெரும் பங்குண்டு என, இந்த உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை நான்கு கோல் களை அடித்துள்ள பெல் ஜியத் தாக்குதல் ஆட்டக் காரர் ரொமேலு லுக்காகு முன்ன தாகக் கூறி இருந்தார். அதேபோன்று, “எங்களுக்கு ஹென்ரி மிக முக்கியமானவர்.

அவர் விளையாடிய காலங்களில் நடந்தவற்றைச் சொல்வது எங்க ளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அது மிகவும் உதவியா கவும் இருக்கிறது. அவரது இருப் பும் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடிய அனுபவமும் எங்களிடம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன,” என்று அவ்வணியின் தற்காப்பு வீரரான டோபி அல்டெர் வெய்ரெல்டும் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் தங்கள் நாட்ட வராக இருந்தும் தங்களுடன் இல்லாமல் எதிரணியுடன் இருக் கிறாரே என்பதை எண்ணி பிரெஞ்சு ஆட்டக்காரர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.