You are here

ஓவியாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் டுகோள்

நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் காதலிக்கிறார்களா என்பது அவர்களுத்தான் வெளிச்சம். எனினும் இருவரும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஜோடியாகச் சுற்றித் திரியும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளரான நடிகர் ஆரவ் மீது காதல் கொண்டார் ஓவியா. ஆனால், ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதாகவும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் இதை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. இந்நிலையில் இருவரும் பேங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று ஓவியாவிடம் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.