You are here

ரகசிய சட்டத்தின் கீழ் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மீது குற்றச்சாட்டு

யங்கூன்: மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மீது நேற்று ரகசிய சட்டத்தின் கீழ் ரகசிய ஆவணங்களைப் பெற்ற தாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக அவர் களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. யங்கூன் நீதிமன்ற நீதிபதி யே லிவின், 32 வயது வா லோனும் 28 வயது கியாவ் சோ ஊவும் ரகசிய சட்டத்தை மீறியுள்ளனர் என்றார். இந்தக் குற்றச் செயலுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண் டனை விதிக்கப்படலாம். ஆனால் இரு செய்தியாளர் களும் குற்றச்சாட்டை மறுத்துள்ள னர். உலகின் கவனத்தை ஈர்த் துள்ள இந்த வழக்கு மியன்மாரின் பத்திரிகை சுதந்திரத்துக்கு விடுக் கப்பட்ட சவாலாகக் கருதப்படு கிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் செய்தியாளர்கள் கியாவ் சோ ஊ (முன் வரிசையில் நடுவில்), வா லோன் (பின் வரிசையில் இடமிருந்து 2வது) ஆகிய இருவரும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும்