You are here

தாய்லாந்து: இதுவரை 8 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து நேற்று இரவு எட்டாவது சிறுவர் மீட்கப் பட்டார். நேற்றிரவு 9.30 வரை யிலான நிலவரம். எஞ்சிய ஐவரை மீட்கும் பணிகள் தொடருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. நான்கு சிறுவர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட நிலையில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் ஐந்தாவது சிறு வன் மீட்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக மீட் கப்பட்டனர். இன்னும் நான்கு சிறுவர்களையும் 25 வயது காற் பந்து பயிற்றுநரையும் மீட்கவேண்டி உள்ளது. வெள்ளம் ஒருபுறம், நேர மின்மை மறுபுறம் என பெரும் சவால்களை எதிர்நோக்கும் முக் குளிப்பாளர்கள் துணிச்சலுடன் தாம் லுவாங் குகைக்குள் நுழைந் தனர்.

தாய்லாந்தில் வடக்குப்புற சியாங் ராய் மாநிலத்தில் இருக்கும் மே சாய் மாவட்டத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் வயது 11 முதல் 16 வரை உள்ள 12 சிறுவர்களும் 25 வயது பயிற்று விப்பாளரும் ஜூன் 23 முதல் சிக்கி இருந்தனர். அவர்களில் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்கள். மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறார்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மழை பெய்தாலும்கூட இன்று சமாளித்துவிடலாம் என்ற தைரியம் வந்திருக்கிறது என்று மீட்புப் பணி களுக்குத் தலைமை தாங்கும் முன்னாள் மாநில ஆளுநர் நரோங் சாக் நேற்று செய்தியாளரிடம் தெரி வித்தார். குகை அமைந்துள்ள இடத்தில் ஞாயிறு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது.

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் ஐந்தாவது சிறுவர் மீட்கப்பட்டார். தொடர்ந்து மேலும் மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர். தாய்லாந்து போலிஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவர்கள் சியாங் ராய் ராணுவ விமான நிலையத்தில் தயாராகக் காத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மாற்றப்பட்டனர். அந்த வாகனம் மூலம் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்