‘கேர்‌ஷீல்டு லைஃப் திட்டத்துக்கு அரசாங்கம் $100 மி. வழங்கும்’

காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு முன்பாகவே உடற்குறையுடைய சிங்கப்பூரர்களையும் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக 'கேர்‌ஷீல்டு லைஃப்' திட்டத்துக்கு அரசாங்கம் $100 மில்லியனை வழங்க இருக்கிறது. 1980ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் பிறந்த, பிறக்கும் எதிர்காலப் பிரிவினரையும் நிதி, சுகாதார, உடற்குறையுடைய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்வதை ஈடுகட்டுவதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சின் மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மோசமான உடற்குறைக்கு ஆளாகிறவர்களுக்கு அவர்களின் பராமரிப்புத் தேவைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பு அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் கிடைக்கும் என்றும் திருவாட்டி கோர் குறிப்பிட்டார். 2020ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் சேரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில் 0.1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் ஏற்கெனவே உடற்குறையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் அமைச்சர் கோர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!