தோக்கியோ: ஜப்பானில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச் சரிவிலும் சிக்கி உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானில் மழை தொடர்ந்து பெய்வதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் கட்டட இடிபாடு களுக்கு இடையில் சிக்கி யுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மேற்கு ஜப்பான் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. பாதுகாப்பு கருதி 2 மில்லியன் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கு வதற்கு பயிற்சி கூடங்களும் பள்ளிக்கூடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர். ஜப்பானில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அறிவிக்கப் பட்டுள்ளதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மேற்குப் பகுதி அபாயத் தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது.
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்ததுடன் பல வீடுகள் முற்றாக சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. பாதிக்கப்பட்டவர்களுக்கு போலிசார், ராணுவ வீரர்கள் உட்பட பலர் உதவி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்