பள்ளிக்கு முந்தைய கற்பித்தலில் புதிய முறை

பள்ளிக்கு முந்தைய கல்வி நிலையங்களில் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படவுள் ளது. குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள், சிறுவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு புதிய கற்பித்தல் முறை சோதனை செய்யப்படவுள்ளது. அகரவரிசை முறையிலான இந்தக் கற்பித்தல் மூலம் குழந்தை களால் எளிதில் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். அத்து டன் அவர்களுடன் ஒருவருக் கொரு வர் என்ற அடிப்படையில் உரையாடுவதன் மூலம் அவர் களின் வளர்ச் சிக்கு ஊக்க மூட்டுவதாக இது அமையும். தொடக்ககால குழந்தைப் பருவ மேம்பாட்டு முகவையும் தெமா செக் அறநிறுவனமும் இணைந்து இந்த முன்னோடித் திட்டம் பற்றி நேற்று அறிவித்தன. குறிப்பாக இந்தத் திட்டத்தில் கைக்குழந்தை முதல் 3 வயது குழந்தைகள் பயன்பெறுவர். இந்த முன்னோடித் திட்டத்தில் என்டியுசி மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், பிசிஎப் ஸ்பார்க்கல்டோட்ஸ், பெர்சத்து வான் பெமுடி இஸ்லாம் சிங்கப்பூரா, பிரஸ்பிடேரியன் கம் யூனிட்டி சர்வீசஸ் ஆகிய கல்வி நிலையங்கள் பங்கேற்கவுள்ளன. அதற்காக 60 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தச் சோதனைத் திட்டம் பய னுள்ளதாக இருந்தால் இந்தக் கற்பித்தல் முறை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்ப டும்.

குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் கெபுன் பாருவில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பள்ளியில் குழந்தை ஒன்றிடம் பேசி விளையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!