டூரின்: போர்ச்சுகல் காற்பந்து அணித்தலைவரும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஸ்பெயினின் ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவிற் காக விளையாடி வந்தவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 33, இத்தாலியின் யுவென்டஸ் குழுவுடன் இணைந்துள்ளார். யுவென்டசுடன் நான்காண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளார் ரொனால்டோ. அவருக்காக 112 மில்லியன் யூரோவை (S$178 மில்லியன்) ரியால் குழுவிற்குத் தர யுவென்டஸ் ஒப்புக்கொண்டுள்ள தாக பிபிசி செய்தி கூறுகிறது.
இதையடுத்து, நெய்மார், கிலியன் இம்பாப்பே, ஃபிலிப் கொட்டின்யோ ஆகியோருக்கு அடுத்தநிலையில், உலகின் விலை மதிப்புமிக்க நான்காவது காற்பந்து வீரராக ரொனால்டோ உருவெடுத் துள்ளார். யுவென்டஸ் குழுவில் ஒரு பருவத்திற்கு 30 மில்லியன் யூரோவை (S$47.8 மி,) அவர் ஊதியமாகப் பெறவிருக்கிறார்.