தடையை முட்டித் தள்ளிய உம்டிட்டி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக முன்னுரைக்கப்பட்ட பிரான்ஸ், அந்தக் கணிப்பை மெய்யாக்கும் நிலையை எட்டியுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொட ரில் அபாயகரமான அணியாகத் திகழ்ந்த ஈடன் ஹசார்ட் தலைமை யிலான பெல்ஜியத்தை அரையிறுதி யில் பிரான்ஸ் 1=0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பெல்ஜியம் மத்தியத் திடலில் ஆதிக்கம் செலுத்தியது. இதை அடுத்து, ஹசார்ட், டி பிரய்ன ஆகியோரது தாக்குதலை முறி யடிக்கும் நோக்கத்துடன் தற்காப் பில் பிரான்ஸ் வீரர்கள் அதிக கவனம் செலுத்தி, அவர்களை முன்னேறவிடாமல் கட்டுப்படுத் தினர்.

இருப்பினும், பெல்ஜிய அணி யின் அச்சுறுத்தல் தொடர்ந்தது. 16வது நிமிடத்தில் டி பிரய்ன லாவகமாக அனுப்பிய பந்தைப் பெற்ற ஹசார்ட், அதை வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால், பந்து வலையைவிட்டு சற்றே விலகிச் சென்றது. பெயருக்கேற்ப ஹசார்ட், அபாயகரமான ஆட்டக்காரராகவே திடலில் வலம் வந்தார். அதன்பின்னர் இரு அணி களுக்கும் ஒரு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தன. கார்னரில் இருந்து வந்த பந்தை டோபி அல் டர்வெய்ரல்ட் வலையை நோக்கி ஓங்கி உதைக்க, அதை பிரான்ஸ் அணித்தலைவரும் கோல்காப்பாள ருமான ஹியூகோ லோரிஸ் அற்புத மாகப் பாய்ந்து தடுத்தார். பிரான்ஸ் தரப்பில், இம்பாப்பே கடத்திக் கொடுத்த பந்தை பெஞ்சமின் பவார்ட் கோலாக்க முயன்றார். ஆனால், தாழ்வாக வந்த பந்தைத் தடுத்தாடினார் பெல்ஜிய அணியின் கோல்காப் பாளர் திபோ கோர்ட்டுவா.

பிரான்ஸ் அணியின் வெற்றி கோலை அடித்த சேமுவல் உம்டிட்டி (நடுவில்). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!