அமெரிக்கா, வடகொரியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நிலைச் சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்தேறியதில் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு ஒரு புது சகாப்தத்தை உருவாக்க உதவிய சிங்கப்பூரர்களுக்குத் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண் டார் தென்கொரிய அதிபர் மூன் ஜே உன். சிங்கப்பூருக்கு ஜூலை 11 முதல் 13 வரை அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் மூன், பிரதமர் திரு லீ சியன் லூங்குடன் செய்தியாளர் கூட்டத் தில் நேற்று பேசினார். வட்டார அமைதிக்கும் நிலைத் தன்மைக்கும் தாமும் பிரதமர் லீயும் ஒத்துழைக்க விரும்புவதாக வும் அவர் கூறினார். வர்த்தகம், தொழில்துறை, எரி சக்தி, சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு, புதிய சிறிய நடுத்தர நிறுவனங்கள், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் மொத்தம் ஆறு ஒப் பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகின.
(வலமிருந்து) பிரதமர் லீ, தென்கொரிய அதிபர் மூன் ஜே உன், திரு லீயின் துணைவியார் ஹோ சிங், அதிபர் மூனின் துணைவியார் கிம் ஜொங் சூக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.