மும்பை: மழை விட்டாலும் வெள்ளம் வடிந்தபாடில்லை

மும்பை நகரில் ஐந்து நாட்களாகக் கொட்டி தீர்த்த கனமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் வடிந்தபாடில்லை. குறிப்பாக இரட்டை நகரங்களான வசாய், நிரார் பகுதியில் வசிக்கும் மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா முழுவதும் பெய்த பருவமழையால் மும்பை மட்டுமல்லாது அதன் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட் ஆகியன வும் திணறிப்போயின. நகரப் பகுதி களை வெள்ளம் சூழ்ந்தன. ஏராளமான கிரா மங்கள் வெள்ளத்தால் துண்டிக் கப்பட்டன.

ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீர் ஆதாரங் களான ஏரிகள், அணைகள் ஆகிய வற்றின் நீர்மட்டம் உயர்ந்துவிட்டது. மும்பை பெருநகரத்துக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான துல்சி நிரம்பி வழிகிறது. இதுதவிர சில அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. மும்பை, தானே, பால்கர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மும்பையின் இரட்டை நகரங்களில் ஒன்றான வசாயில் ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையிலும் ரயில்கள் ஆபத்தான பயணத்தைத் தொடரு கின்றன. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!