சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் 39,615 குழந் தைகள் பிறந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண் ணிக்கை 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் நான்கு விழுக்காடு குறைவு. அந்த ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 41,251. மேலும் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இது குறைவான பிறப்பு விகிதம்.
2010ஆம் ஆண்டில் 37,967 என்ற குறை வான எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்தன. அதனைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதி கரித்து வந்தது. கடந்த எட்டு ஆண்டு களில் கடல்நாக ஆண்டான 2012ஆம் ஆண்டில்தான் ஆக அதிக அளவாக 42,663 குழந்தைகள் பிறந்ததாக புள்ளி விவர அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு குடும்பத்தின் நான் காவது குழந்தையாக பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 2,118. இந்தப் பிரிவின் எண் ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே அதிகம். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு 1,853 குழந்தைகள் நான்காவதாக பிறந்தன. கடந்த ஆண்டு பிறந்த மொத்த குழந்தை களில் 59 விழுக்காடு சீனக் குழந்தைகள், 19 விழுக்காடு மலாய் குழந்தைகள், 11 விழுக்காடு இந்திய குழந்தைகள். எஞ்சிய 11 விழுக்காடு இதர இனங்களைச் சேர்ந் தவை.