குகையை காட்சிக்கூடமாக மாற்ற விரும்பும் தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்தில் 12 சிறுவர் களும் அவர்களின் பயிற்றுவிப் பாளரும் சிக்கியிருந்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாற்றப்படக்கூடும் என்று மீட்புக் குழுவின் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இருள் சூழ்ந்த, நீர் நிறைந்த சிக்கலான குகைக்குள் இரண்டு வாரங்களாக சிக்கித் தவித்த 13 பேரையும் மீட்புக் குழுவினர் எவ்வாறு பாதுகாப்பாக மீட்டனர் என்பதை விளக்கும் காட்சிக் கூடமாக அக்குகை விளங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். தாய்லாந்தில் சுற்றுலாப் பயணி களை ஈர்க்கும் முக்கிய இடமாக அது விளங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தாய்லாந்தில் உள்ள மிகப் பெரிய குகைகளில் தாம் லுவாங் குகையும் ஒன்று. சியாங் ராய் மாநிலத்தில் மலைக்குன்றுகளுக்கு அடியில் அக்குகை அமைந்துள்ளது. அப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆகவே அப்பகுதியை அருங்காட்சியமாக மாற்ற தாங்கள் விரும்புவதாக மாநில முன்னாள் ஆளுநரும் மீட்புக் குழுவின் தலைவருமான நரோங்சாக் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார். இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் பாது காப்புக்காக அந்த குகைக்கு உள்ளேயும் வெளியிலும் முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் அமல் படுத்தப்படும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ-சா கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!