பிரசல்ஸ்: ராணுவச் செலவை அதிகரிக்க நேட்டோ நாடு கள் இணங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். பிரசல்ஸில் நடந்த இரண்டு நாள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், தற்காப்பு செலவுக்கு 2 விழுக்காட்டிற்கும் அதிகமாக செலவிட நேட்டோ நாடுகள் கடப்பாடு கொண் டுள்ளதாகக் கூறினார். முன்னதாக திரு டிரம்ப், நேட்டோ நாடுகள் அவற்றின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 4% ராணுவத்திற்கு செலவிட கடப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத் தினர். திரு டிரம்ப்பின் இந்த யோசனைக்கு நேட்டோ நாடுகள் பல எதிர்ப்பு தெரி வித்தன.
தற்காப்புக்கு ஜெர்மனி செலவிடும் தொகை தொடர்பில் திரு டிரம்ப், ஜெர்மனியை குறை கூறினார். பிரசல்ஸ் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்கப் பட்டதாக பிரசல்ஸ் தகவல்கள் கூறின. ஆப்கானிஸ்தானில் அமைதிப் பணிகளில் ஈடுபட கூடுதல் பிரிட்டிஷ் வீரர்களை அங்கு அனுப்ப பிரிட்டிஷ் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.